MARC காட்சி

Back
சப்தபுரீஸ்வரர் திருக்கோயில் 
245 : _ _ |a சப்தபுரீஸ்வரர் திருக்கோயில்  -
246 : _ _ |a திருத்தாளமுடையார் கோயில், தாளபுரீசுவரர் கோயில், தாளேஸ்வரர் கோயில்
520 : _ _ |a சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது. பெரிய கோயில். திருத்தாளமுடையார் கோயில் என்றழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தரின் யாத்திரையில் இதுவே முதல்தலம். கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்விகஓசையை இறைவி தந்து அருள்செய்த தலம்.
653 : _ _ |a கோயில், சைவம், சிவபெருமான், தேவாரத் திருத்தலம், சோழநாட்டு வடகரைத்தலம், தாளபுரீஸ்வரர், திருக்கோலக்கா, சீர்காழி, நாகப்பட்டினம், தாளேஸ்வரர், சப்தபுரீஸ்வரர், திருத்தாளமுடையார், ஓசை கொடுத்த நாயகி, திருஞானசம்பந்தர்
700 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
710 : _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம்
902 : _ _ |a 04364 - 274 175
905 : _ _ |a கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சோழர்கள்
909 : _ _ |a 1
910 : _ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம்.
914 : _ _ |a 11.2347702
915 : _ _ |a 79.7275971
916 : _ _ |a சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர், திருத்தாளமுடையார்
917 : _ _ |a தாளேஸ்வரர்
918 : _ _ |a தொனிப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி
922 : _ _ |a கொன்றை
923 : _ _ |a ஆனந்த தீர்த்தம்
925 : _ _ |a காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
926 : _ _ |a சீர்காழியில் திருமுலைப்பால் உற்சவம் நடைபெறும்போது இங்குத் தாளம் வழங்கும் ஐதீகவிழா நடைபெறுகிறது. கார்த்திகைச் சோமவாரங்கள், நவராத்திரி, சஷ்டி, சிவராத்திரி, பிரதோஷ காலங்கள் முதலிய சிறப்பு விழாக்கள் நடைபெறுகின்றன.
928 : _ _ |a இல்லை
929 : _ _ |a கருவறையில் மூலவர் இலிங்கத் திருமேனி. அம்பாள் நின்ற திருமேனி. ஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, இலிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன், நால்வர், அதிகார நந்தி உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.
930 : _ _ |a கைகொட்டிப் பாடிய ஞானசம்பந்தருக்கு இறைவன், திருவைந்தெழுத்து பொறித்த தாளத்தையருள, அதற்குத் தெய்வீக ஓசையை இறைவி தந்து அருள் செய்த தலம். இதன்பொருட்டே இக்கோயில் "திருத்தாளமுடையார் கோயில் " என்றழைக்கப்படுகிறது. பிற்காலத்தில் இப்பகுதியில் தன் ஊமை மகன் பேசும் ஆற்றலைப் பெறவேண்டும் என்று, பிரார்த்தித்துக் கொண்ட தாய் ஒருத்தி, அவ்வாறே இறையருளால் தன் மகன் பேசும் வல்லமை வெற, மகிழ்ந்து, கோயிலுக்குத் தன் காணிக்கையாகச் செய்து தந்துள்ள "பொற்றாளம்" கோயிலில் உள்ளது.
932 : _ _ |a கோயில் புதுப் பொலிவுடன் திகழ்கிறது. எதிரில் திருக்குளம் - ஆனந்ததீர்த்தம். முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுதையில் ரிஷபாரூடர் தரிசனம் - உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம். நுழையும்போது நால்வர்அதிகார நந்தி சந்நிதிகள் உள. பிராகாரத்தில் விநாயகர்சோமாஸ்கந்தர்சுப்பிரமணியர்மகாலட்சுமிசனிபகவான்பைரவர்சூரியன் சந்நிதிகள் உள்ளன.உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராச சபை உள்ளது.
933 : _ _ |a இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
934 : _ _ |a தோணியப்பர் கோயில், திரிவிக்கிரமப் பெருமாள் கோயில், திருஞானசம்பந்தர் அவதார இல்லம்
935 : _ _ |a சீர்காழிக்குப் பக்கத்தில் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
936 : _ _ |a காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
937 : _ _ |a திருக்கோலக்கா, சீர்காழி
938 : _ _ |a சீர்காழி
939 : _ _ |a திருச்சி
940 : _ _ |a சீர்காழி வட்டார விடுதிகள்
995 : _ _ |a TVA_TEM_000181
barcode : TVA_TEM_000181
book category : சைவம்
cover images TVA_TEM_000181/TVA_TEM_000181_திருக்கோலக்கா_தாளபுரீசுவரர்-கோயில்-0001.jpg :
Primary File :

TVA_TEM_000181/TVA_TEM_000181_திருக்கோலக்கா_தாளபுரீசுவரர்-கோயில்-0001.jpg

TVA_TEM_000181/TVA_TEM_000181_திருக்கோலக்கா_தாளபுரீசுவரர்-கோயில்-0002.jpg

TVA_TEM_000181/TVA_TEM_000181_திருக்கோலக்கா_தாளபுரீசுவரர்-கோயில்-0003.jpg

TVA_TEM_000181/TVA_TEM_000181_திருக்கோலக்கா_தாளபுரீசுவரர்-கோயில்-0004.jpg

cg102v008.mp4